TNEB Apprentice Registration 2024: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB/TANGEDCO) 2023-2024 ஆண்டுக்கான டெக்னீசியன் அப்ரண்டீஸ் பயிற்சிக்காக 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பவோர் டிகிரி அல்லது டிப்ளமோ 2020, 2021, 2022, 2023 ஆகிய வருடங்களில் முடிந்தவர்களாக இருக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள்
- Electrical and Electronics Engineering – 395
- Electronics and Communication Engineering – 22
- Electronics and Instrumentation Engineering – 09
- Computer Engineering/ Information Technology – 09
- Civil Engineering – 15
- Mechanical Engineering – 50
- Total 500
கல்வித் தகுதி
- குறைந்தபட்ச கல்வித் தகுதியாக மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
- மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு வாரியாக டிப்ளமோ மதிப்பெண்களை வைத்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
- இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் National Web Portal எனப்படும் https://nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- அதன் பின்பு 12 இலக்க மாணவர்களுக்கான எண் தரப்படும்.
- அதன்பின்பு www.mhrdnats.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 05.02.2024
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 20.02.2024
- தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் நாள் – 26.02.2024
- தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நாள் – 05.03.2024 to – 08.03.2024
விண்ணப்பிதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, முழு தகவல்களையும் தெரிந்து தெரிந்து கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.