TN Health Department Recruitment: அரசு மருத்துவமனையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சுகாதார ஆய்வாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர்கள் என 18,000 வரை மாத ஊதியத்துடன் 60-க்கும் அதிகமான பணியிடங்கள் ஒப்பந்தத அடிப்படையில் நிரப்ப உள்ளனர்.
ஆர்வமுள்ளவர்கள் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் விண்ணப்பத்து பயனடையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளர்.
தமிழக அரசு சார்பில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் மற்றும் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான பயிற்சி அளித்து, பிரபல நிறுவனமான டாடா நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வானது நடைபெற்று வருகிறது.
இதுபோன்று அரசு சார்பில் அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வானது நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் அறிவித்துள்ளார்.
இதன்படி மருத்துவ நலச்சங்கம் சார்பாக தேர்வு நடைபெற உள்ளதாகவும், ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் அதன் கீழ் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், தூய்மை பணியாற்றினார் என 60-க்கும் அதிகமான பணிகளுக்கு காலியாக உள்ளது.
பதவி மற்றும் காலிடங்கள் : 1 டேட்டா எண்டரி ஆப்பரேட்டர், 1 ப்ளாக் டேட்டா எண்டரி ஆப்பரேட்டர், 21 இடைநிலை சுகாதார பணியாளர், 13 சுகாதார ஆய்வாளர், 1 பிசியோதெரபிஸ்ட், 2 தூய்மை பணியாளர்கள், 1 ஓட்டுநர் ஆகிய பணிகள் உள்ளது. வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதிகள்: இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு GNM/B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும். டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி படிப்பு, 10-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு இளநிலை பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தூய்மை பணியாளர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் வேண்டும்.
சம்பள விவரம் : 1. சுகாதார ஆய்வாளர் பதவிக்கு ரூ.14 ஆயிரம் ரூபாய், தூய்மைப் பணியாளர் பதவிக்கு ரூ.8,500. 2. பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு ரூ.13,5000, ஓட்டுநர் பதவிக்கு 13,500 ரூபாய். 3. டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500. 4. இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ரூ.18,000.
விண்ணப்பிக்கும் முறை: https://ramanathapuram.nic.in இணையதள பக்கத்திற்கு சென்று அதில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 24-ம் தேதி ஆகும்.