வெளுத்து வாங்கப் போகும் மழை! இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை..

Rain Alert Today

TN Rain Update: இன்று மே,19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

TN Rain Update
வெளுத்து வாங்கப் போகும் மழை! இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை..

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு தவித்தனர். எனவே எப்போது வெயில் குறையும் என காத்திருந்த மக்களுக்கு தென் மேற்கு பருவமழை தொடக்கமே அதிரடியாக வெப்பத்தை குறைத்துள்ளது. இந்தாண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. 

இதனால் கேரளாவில் விரைவில் மழை கொட்டப்போகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். 

பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக கன முதல் மிதனமான வழை பெற்ற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை.?

இன்று (19-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சுரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read also: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்! ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம், விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *