TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

TN Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு முழுவதும் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப வரவேற்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2299 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இப்பொழுது ஒவ்வொரு தாலுகாவில் உள்ள கிராமங்கள் வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

கிராம உதவியாளர் காலிப்பணியிடம் 2025

இதற்கு முன்பு தமிழக முழுவதும் 2022 ஆம் ஆண்டு கடைசியாக கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது இந்த ஆண்டுக்கான கிராம உதவியாளர் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 2299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
  • கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
  • மாத ஊதியம்: சிறப்பு காலமுறை ஊதியம் Level 06 (ரூ.11,100-ரூ.35,100/)
  • வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் GEN 32, ST/SC/DNC/MBC/BCM/BC – 37

விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2025 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

கிராம உதவியாளர் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

செங்கல்பட்டு: Notification 1 | Notification 2

ஈரோடு: Notification 1 | Notification 2

கிராம உதவியாளர் காலியிடம் அரசாணை GO: Click here

TN Village Assistant Application Form Download: Click here

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *