TN Board 12th Result 2026 Live : தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9:30 மணிக்கு வெளியாகிறது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை நடைபெற்றது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இதற்கான முடிவுகள் இன்று (மே 8) காலை 9:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் முடிவுகளை https://tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரிகள் மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.
TN HSE +2 Results 2026 Check Online : 12-ம் வகுப்பு முடிவுகள் அறிந்துகொள்ள தேவையானவை என்ன?
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களின் மூலம் முடிவுகள் அறிந்துகொள்ளலாம்.
TN 12th Results Live : சரியாக 9:30AM மணிக்கு தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியாக 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.
TN 12th Results Live : சரியாக 9:30AM மணிக்கு தேர்வு முடிவுகள் வாட்ஸ் ஆப் மூலம்
வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ’Hi’ என்ற குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கே வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
TN HSC +2 Results 2026 :முடிவுகளை அறிந்துகொள்ள படிப்படியான வழிமுறை இதோ
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் பதிவெண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு செல்லவும்.
படி 2 : அதில் முடிவுகளை அறிந்துகொள்ள மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
படி 3 : Get Marks என்பதை கிளிக் செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
Result Link 1 :- https://tnresults.nic.in/
Result Link 2 :- https://results.digilocker.gov.in/


Leave a Reply