Author: Siva

  • 10th தேர்ச்சிக்கு மாதம் (₹15900 – 50400/-) ஊதியத்தில் தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் வேலை வாய்ப்பு

    10th தேர்ச்சிக்கு மாதம் (₹15900 – 50400/-) ஊதியத்தில் தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் வேலை வாய்ப்பு

    TNRD Panchayat Secretary Recruitment 2025: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கிராம ஊராட்சி செயலாளர் வேலைவாய்ப்புக்கு 1468 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    10th தேர்ச்சிக்கு மாதம் (₹15900 – 50400/-) ஊதியத்தில் தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சி துறையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் வேலை வாய்ப்பு

    தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அளவில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் 10/10/2025 முதல் 09/11/2025 வரை ஆன்லைன் மூலமாக https://www.tnrd.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    பதவியின் பெயர்

    • ஊராட்சி செயலாளர் ( Panchayat Secretary )
    • மொத்த காலியிடம் – 1468

    கல்வித்தகுதி

    • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    • எட்டாம் வகுப்பு வரை தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

    வயதுவரம்பு

    • 01/07/2025 அன்றைய தேதி படி, குறைந்தபட்ச வயது, 18 வயது நிரம்பியராக இருக்க வேண்டும்.
    • அதிகபட்ச வயது, பொதுப் பிரிவினருக்கு 32, BC/MBC/DNC – 34, SC/SCA/ST – 37

    ஊதியம்

    • ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு மாத ஊதியமாக Level 2 (₹15900 – 50400/-) வழங்கப்படுகிறது.

    விண்ணப்ப கட்டணம்

    • ₹100 – பொதுப் பிரிவினர், BC/MBC
    • ₹50 – SC/ST மாற்றுத்திறனாளிகள்

    மாவட்ட வாரியாக காலியிடம்

    • அரியலூர் – 33
    • செங்கல்பட்டு – 52
    • கோயம்புத்தூர் – 14
    • கடலூர் – 37
    • தர்மபுரி – 21
    • திண்டுக்கல் – 39
    • ஈரோடு – 26
    • கள்ளக்குறிச்சி – 33
    • காஞ்சிபுரம் – 55
    • கன்னியாகுமரி – 30
    • கரூர் – 32
    • கிருஷ்ணகிரி – 50
    • மதுரை – 69
    • மயிலாடுதுறை – 31
    • நாகப்பட்டினம் – 18
    • நாமக்கல் – 33
    • பெரம்பலூர் – 16
    • புதுக்கோட்டை – 83
    • இராமநாதபுரம் – 17
    • ராணிப்பேட்டை – 31
    • சேலம் – 54
    • சிவகங்கை – 51
    • தென்காசி – 36
    • தஞ்சாவூர் – 91
    • தேனி – 20
    • நீலகிரி – 9
    • தூத்துக்குடி – 32
    • திருச்சிராப்பள்ளி – 72
    • திருநெல்வேலி – 24
    • திருப்பத்தூர் – 24
    • திருப்பூர் – 19
    • திருவள்ளுர் – 88
    • திருவண்ணாமலை – 69
    • திருவாரூர் – 38
    • வேலூர் – 26
    • விழுப்புரம் – 60
    • விருதுநகர் – 50

    எவ்வாறு விண்ணப்பிப்பது?

    • விண்ணப்பதாரர்கள் https://tnrd.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

    முக்கியமான நாட்கள்

    ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்10/10/2025
    விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்09/11/2025

    முக்கிய இணைப்புகள்

    TNRD கிராம ஊராட்சி செயலாளர் அறிவிப்புDownload
    மாவட்ட வாரியாக காலியிடம் (தனித்தனியாக)District Wise
    மாவட்ட வாரியாக காலியிடம் Full ListView
    ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online

  • ரிசர்வ் வங்கி அதிகாரி கிரேடு B வேலைவாய்ப்பு 120 காலிபணியிடங்கள் 2025 அறிவிப்பு

    ரிசர்வ் வங்கி அதிகாரி கிரேடு B வேலைவாய்ப்பு 120 காலிபணியிடங்கள் 2025 அறிவிப்பு

    RBI Grade B Recruitment 2025: மத்திய அரசு ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரி கிரேடு ‘B’ 120 காலிப்பணியிடங்களை நிரப்பும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    RBI Grade B 2025 Notification
    ரிசர்வ் வங்கி அதிகாரி கிரேடு B வேலைவாய்ப்பு 120 காலிபணியிடங்கள் 2025 அறிவிப்பு

     

    ரிசர்வ் வங்கி இந்தியா (RBI) அதிகாரி கிரேடு ‘B’ பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 120 காலி இடங்கள் உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10 செப்டம்பர் 2025 முதல் ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rbi.org.in/ மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வில் Prelims, Mains மற்றும் நேர்காணல் அடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி 9 அக்டோபர் 2025.

    நிறுவனம்

    • ரிசர்வ் வங்கி (RBI)

    காலி இடங்கள்

    • 120

    பதவி

    • அதிகாரி கிரேடு ‘B’ (Direct Recruitment)

    வேலை இடம்

    • இந்தியா முழுவதும்

    கல்வி தகுதி

    • கிரேடு ‘B’ (General): ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு, குறைந்தது 60% மதிப்பெண்கள் (SC/ST/PwBD – 50%)
    • கிரேடு ‘B’ (DEPR): பொருளாதாரம் அல்லது நிதியில் முதுகலை பட்டம், குறைந்தது 55% மதிப்பெண்கள் (SC/ST/PwBD – 50%)
    • கிரேடு ‘B’ (DSIM): புள்ளியியல் / கணிதம் / தரவியல் தொடர்பான முதுகலை பட்டம்

    வயது வரம்பு:

    • 01-07-2025 தேதிக்கேற்ப குறைந்தபட்சம் 21 மற்றும் அதிகபட்சம் 30; அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

    விண்ணப்ப கட்டணம்

    • பொதுப்பிரிவு / OBC / EWS – ₹850
    • SC / ST / PwBD – ₹100

    தேர்வு முறை:

    • Preliminary Examination
    • Main Examination
    • நேர்காணல்

    விண்ணப்பிக்க கடைசி தேதி

    • 09-10-2025

    அதிகாரப்பூர்வ இணையதளம்

    https://www.rbi.org.in/

    Short Notice – View

  • சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025: 306 காலியிடங்கள் – ரூ.18,000/- முதல் ரூ.23,800/- வரை சம்பளம்!

    சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025: 306 காலியிடங்கள் – ரூ.18,000/- முதல் ரூ.23,800/- வரை சம்பளம்!

    சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியீடு! 306 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் – Staff Nurse, Social Worker, Psychologist உள்ளிட்ட பணியிடங்கள்.

    chennai corporation recruitment 2025
    சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025: 306 காலியிடங்கள் – ரூ.18,000/- முதல் ரூ.23,800/- வரை சம்பளம்!

    chennai corporation recruitment 2025: சென்னை சிட்டி அர்பன் ஹெல்த் மிஷன், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக 306 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் 15.09.2025 மாலை 5.00 மணி வரை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    காலிப் பணியிடங்கள்

    • Staff Nurse – 288
    • Social Worker (Psychiatric Social Worker) – 5
    • Psychologist (Clinical Psychologist) – 1
    • Vaccine Cold Chain Manager – 1
    • STS (Senior Treatment Supervisor) – 7
    • Programme cum Administrative Assistant – 1
    • Hospital Worker (Multipurpose Health Worker) – 2
    • Security Staff – 1

    கல்வித்தகுதி

    • Staff Nurse – DGNM / B.Sc Nursing (INC & TNNC பதிவு அவசியம்)
    • Social Worker – PG in Social Work / M.Phil (Psychiatric Social Work)
    • Psychologist – Clinical Psychology தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட தகுதி
    • Vaccine Cold Chain Manager – B.E./B.Tech (CSE/IT) + 1 ஆண்டு அனுபவம்
    • STS – B.Sc அல்லது Sanitary Inspector Course + MS Office + 2W License
    • Programme cum Administrative Assistant – Degree + MS Office + 1 ஆண்டு அனுபவம்
    • Hospital Worker & Security Staff – 8ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி

    மாத ஊதியம்

    • Staff Nurse – ₹18,000
    • Social Worker – ₹23,800
    • Psychologist – ₹23,000
    • Vaccine Cold Chain Manager – ₹23,000
    • STS – ₹19,800
    • Programme cum Administrative Assistant – ₹12,000
    • Hospital Worker – ₹8,500
    • Security Staff – ₹8,500

    வயது வரம்பு

    • Staff Nurse மற்றும் பிற பணியிடங்கள் – 50 வயதுக்குள்
    • Programme cum Administrative Assistant – 45 வயதுக்குள்

    தேர்வு செய்யும் முறை

    • ஆவணங்கள் சரிபார்ப்பு
    • நேர்முகத் தேர்வு

    முக்கியமான நாட்கள்

    • விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.09.2025 (மாலை 5.00 மணி வரை)

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

    Office of the Member Secretary, CCUHM / City Health Officer,
    Public Health Department, 3rd Floor, Amma Maligai,
    Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600 003

    முக்கிய இணைப்புகள்

    Official Website of Greater Chennai CorporationClick Here
    Chennai Corporation Recruitment 2025 link of Short NoticeClick Here
    Chennai Corporation Recruitment 2025 Official NotificationClick Here
  • SBI Online Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    SBI Online Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    SBI Online Bike Loan: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பைக் லோன் பெறுவதற்கு ஒரு சிறந்த லோன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மிக குறைந்த வட்டியில் நீங்கள் இருசக்கர வாகனம் வாங்க முடியும். எப்படி வாங்குவது அதற்கான தகுதிகள் என்பதை பற்றி பார்ப்போம்.

    SBI Super Bike Loan
    Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    இந்த எஸ்பிஐ சூப்பர் பைக் லோன் ஒரு 1.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை நீங்கள் கடன் பெறலாம் பெறலாம். நீங்கள் சுய தொழில் செய்து கொண்டிருந்தாலும் அல்லது விவசாயம் செய்து கொண்டிருந்தாலும் நீங்கள் இந்த குறிப்பிட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சூப்பர் பைக் லோன் திட்டத்தில் கடனை பெறலாம்.

    நீங்கள் ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் சம்பாதிப்பவராக இருந்தால் மட்டும் போதுமானது, இந்த கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்ற தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் சம்பாதிப்பவராக இருந்தால் மட்டும் போதுமானது இந்த கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி வராக இருக்க வேண்டும் என்ற தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூப்பர் பைக் லோன் கடன் திட்டத்தில் நீங்கள் இந்த கடனை மொத்தமாக 5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான வட்டியாக 8.95% வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு சுய தொழில் செய்பவர்கள், விவசாயிகள், ஐடி வேலையில் இருப்பவர்கள், அரசு வேலை இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் ஆண்டுக்கு 3 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், இந்த கடன் பெறுவதற்கு தகுதியானவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    SBI Super Bike Loan Online
    SBI Super Bike Loan Online

    இந்த வங்கி கடனை பெறுவதற்கு ஸ்டேட் பேங்க் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். வங்கி உங்களது உன்ன பத்தி சரி பார்த்து தகுதி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கடன் வழங்கும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இங்கே பார்க்கவும். மேலும் இந்த கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

    Also Read

  • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு விடுமுறை நாட்காட்டி 2025-26 வெளியீடு

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு விடுமுறை நாட்காட்டி 2025-26 வெளியீடு

    TN School Holidays 2025 Calendar: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) விடுமுறை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழக பள்ளிகளுக்கான விடுமுறை நாட்காட்டி 2025-26 ஆண்டுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலாண்டு தேர்வு முதல் பருவம் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் காலாண்டு விடுமுறையானது செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டாம் பருவம் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை 23 டிசம்பர் முதல் ஆரம்பம். முழு தகவலையும் கீழே உள்ள PDF டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளவும்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுமுறை நாட்காட்டி 2025-26 – Download PDF

    Also Read

  • இந்திய ராணுவம் 387 தொழில்நுட்ப பிரிவு வேலை வாய்ப்பு

    இந்திய ராணுவம் 387 தொழில்நுட்ப பிரிவு வேலை வாய்ப்பு

    Indian army ssc tech recruitment 2025: இந்திய ராணுவம் தொழில்நுட்பப் பிரிவில் 387 வேலை வாய்ப்புகளை ஆண் மற்றும் பெண்களுக்கு அறிவித்துள்ளது.

    Indian army ssc tech recruitment 2025
    Indian army ssc tech recruitment 2025 இந்திய ராணுவம் 387 தொழில்நுட்ப பிரிவு வேலை வாய்ப்பு

    இந்திய ராணுவத்தின் OTA சென்னை மூலமாக 387 SSC தொழில்நுட்பப் பிரிவு வேலைகள் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு ஆன்லைன் மூலமாக www.joinindianarmy.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக 24.07.2025 முதல் 22.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

    கல்வித் தகுதி

    • B.E/B. Tech முடித்தவர்கள், இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள்.

    வயதுவரம்பு

    • 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
    Also Read

    தேர்ந்தெடுக்கும் முறை

    • முதலில் மார்க் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
    • அதன் பிறகு SSB நேர்முகதேர்வு, இரண்டு கட்டங்களாக நடைபெறும்.
    • தேர்வு செய்யப்பட்டவர்கள் 49 வாரம் பயிற்சி சென்னையில் நடைபெறும்.

    ஊதியம்

    • ₹56,100 மாத ஊதியமாக பயிற்சியின்போது வழங்கப்படும்.

    எவ்வாறு விண்ணப்பிப்பது?

    • அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in. மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.

    முக்கியமான நாட்கள்

    ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்24.07.2025
    விண்ணப்பிக்க கடைசி நாள்22.08.2025

    முக்கிய இணைப்புகள்

    அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
    ஆன்லைனில் விண்ணப்பிக்கApply here
    அதிகாரப்பூர்வ இணையதளம்www.joinindianarmy.nic.in.
    Also Read

  • மத்திய புலனாய்வு துறையில் 4987 பாதுகாப்பு உதவியாளர் வேலை

    மத்திய புலனாய்வு துறையில் 4987 பாதுகாப்பு உதவியாளர் வேலை

    IB SA Recruitment 2025: மத்திய புலனாய்வுத் துறையில் பத்தாம் வகுப்பு தகுதிக்கு பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி 4987 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    ib sa recruitment 2025
    மத்திய புலனாய்வு துறையில் 4987 பாதுகாப்பு உதவியாளர் வேலை

    மத்திய புலனாய்வு துறை 4987 பாதுகாப்பு உதவியாளர்/நிர்வாகி காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக அதிகாரப்பூர்வ இணையதளம் www.mha.gov.in அல்லது www.ncs.gov.in இதில் 26.07.2025 முதல் 17.08.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

    கல்வித்தகுதி

    • பத்தாம் வகுப்பு (10th) தேர்ச்சி
    • உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்

    மாத ஊதியம்

    • Level 3 (₹21,700-69,100)

    வயதுவரம்பு

    • 18-27 இருக்க வேண்டும்.
    • OBC- 3, SC/ST- 5 வயது வரம்பில் சலுகை உண்டு.
    Also Read

    தேர்வு கட்டணம்

    • UR, OBC, EWS ஆண்கள் – ₹650/-
    • மற்றவர்கள் – ₹550/-

    தேர்வு செய்யும் முறை

    • எழுத்து தேர்வு
    • நேர்முகத் தேர்வு

    முக்கியமான நாட்கள்

    ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்ப நாள்26.07.2025
    விண்ணப்பிக்க கடைசி நாள்17.08.2025 (11.59 pm)

    முக்கிய இணைப்புகள்

    Short NoticeDownload
    இணையதளம்Website
    ஆன்லைன் விண்ணப்பம்Apply here
    Also Read

  • மத்திய புலனாய்வுத் துறையிலிருந்து 3717 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

    மத்திய புலனாய்வுத் துறையிலிருந்து 3717 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

    IB ACIO Executive 2025: மத்திய புலனாய்வுத்துறை IB- இல் இருந்து, உதவி மத்திய புலனாய்வு அதிகாரி Grade 2 / Executive என்ற பதவிக்கு மொத்தமாக 3717 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    IB ACIO Executive 2025 Application Form – மத்திய புலனாய்வுத் துறையிலிருந்து 3717 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

    IB ACIO Executive Notification 2025: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் மத்திய அரசின் குரூப் சி பதவிக்கு மத்திய புலனாய்வு துறையில் உள்ள இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

    கல்வித் தகுதி

    • ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்
    • கணினி பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்

    வயதுவரம்பு

    • 18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்
    • SC/ST/OBC ஆய்வருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு

    தேர்ந்தெடுக்கும் முறை

    • எழுத்து தேர்வு
    • நேர்முகத் தேர்வு

    மாத ஊதியம்

    • Rs.44,900-1,42,400/-

    எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்

    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • மதுரை
    • சேலம்
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • வேலூர்

    தேர்வு கட்டணம்

    • UR/OBC/EWS ஆண்கள் – ₹650/-
    • மற்றவர்கள் – ₹550/-

    எவ்வாறு விண்ணப்பிப்பது

    • அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு IB ACIO Executive 2025 Application Form
      செல்ல வேண்டும்.
    • அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவை.
    • விண்ணப்பதாரர் புகைப்படம் மற்றும் கையெழுத்து விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    முக்கிய தேதிகள்

    விண்ணப்பிக்க ஆரம்ப நாள்19.07.2025
    விண்ணப்பிக்க கடைசி நாள்10.08.2025

    முக்கிய இணைப்புகள்

    அறிவிப்புDownload PDF
    ஆன்லைன் விண்ணப்பம்Apply here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Website
  • இந்தியன் வங்கி 1500 காலி பணியிடங்கள் அறிவிப்பு

    இந்தியன் வங்கி 1500 காலி பணியிடங்கள் அறிவிப்பு

    Indian bank apprentice recruitment 2025: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் இருந்து 1500 அப்ரென்டிஷுப் காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.

    Indian bank apprentice recruitment 2025 இந்தியன் வங்கி 1500 காலி பணியிடங்கள் அறிவிப்பு

    இந்தியன் வங்கி நாடு முழுவதும் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1500 அப்ரென்டிஷுப் காலி பணியிடங்களில் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 277 காலி பணியிடங்கள் உள்ளன. இந்தப் பதவிகளுக்கு 18.07.2025 முதல் 07.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    கல்வித் தகுதி

    • ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்

    வயதுவரம்பு

    • குறைந்தபட்சம் 20, அதிகபட்சம் 28.
    • ST/SC, OBC, PWD etc – வயது வரம்பில் சலுகை உண்டு.

    தேர்வு செய்யும் முறை

    • எழுத்து தேர்வு
    • உள்ளூர் மொழி அறிவு

    மாத ஊதியம்

    • நகர்ப்புறம் – ₹15,000/-
    • கிராமப்புறம் – ₹12,000/-

    விண்ணப்ப கட்டணம்

    • General/OBC/EWS – ₹800/-
    • SC/ST/PwBD – ₹175/-

    எப்படி விண்ணப்பிப்பது?

    • ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • விண்ணப்பதாரர் புகைப்படம், கையொப்பம், இடது கட்டைவிரல் கைரேகை ஆகியவற்றை விண்ணப்பத்தோடு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    முக்கியமான நாட்கள்

    ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம்18.07.2025
    விண்ணப்பிக்க கடைசி நாள்07.08.2025
    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்பின்னர் அறிவிக்கப்படும்.

    முக்கிய இணைப்புகள்

    அடியார் பூர்வ இணையதளம்https://www.indianbank.in/
    ஆன்லைன் விண்ணப்பம் Click here

  • TNPSC Group 4 Answer Key 2025 |டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2025 விடைகள்

    TNPSC Group 4 Answer Key 2025 |டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2025 விடைகள்

    TNPSC Group 4 Answer Key 2025: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2025 தேர்வுக்கான உத்தேசமான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    TNPSC Group 4 AnswerKey 2025
    TNPSC Group 4 Answer Key 2025 |டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2025 விடைகள்

    தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று நடைபெற்று முடிந்தது. குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. இத்தேர்வினை எழுதுவதற்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு 2025

    சென்னையில் மட்டும் 94 ஆயிரத்து 848 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுகள் 4,922 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 312 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகள் 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது.

    இந்த தேர்வில் மூலம் கிராம நிர்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர் போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    2025 குரூப் 4 தேர்வு முடிவுகள்

    இதற்கான முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும். சென்ற ஆண்டு முடிவுகள் வெளியிட நான்கரை மாதங்கள் ஆனது. இந்த முறை பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்.

    டி.என் .பி.எஸ் .சி குரூப் 4 தேர்வுக்கான விடைகள்

    டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ தளத்தில் மட்டுமே வெளியாகும். பல்வேறு தனியார் பயிற்று நிறுவனங்கள் மூலமாக குரூப் 4 தேர்வுக்கான உத்தேசமான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.

    TNPSC Group 4 Answer Key 2025 PDF Download

    TNPSC Group 4 2025 Answer Key PDF (General Tamil (GT) PDF – (Rajaji Tnpsc Coaching Centre, Namakkal): Click here

    TNPSC Group 4 2025 Answer Key PDF (General Studies (GS) PDF – (Rajaji Tnpsc Coaching Centre, Namakkal): – Click here

    TNPSC Group 4 2025 Answer Key PDF (Maths Detailed – (Rajaji Tnpsc Coaching Centre, Namakkal): Click here

    TNPSC Group 4 2025 Answer Key PDF (Iyachamy Academy Chennai): Click here

  • TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர்  வேலைவாய்ப்பு 2025

    TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

    TN Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு முழுவதும் கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    TN Village Assistant Recruitment 2025 | கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025

    தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப வரவேற்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2299 காலிப்பணியிடங்கள் இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இப்பொழுது ஒவ்வொரு தாலுகாவில் உள்ள கிராமங்கள் வாரியாக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    கிராம உதவியாளர் காலிப்பணியிடம் 2025

    இதற்கு முன்பு தமிழக முழுவதும் 2022 ஆம் ஆண்டு கடைசியாக கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது இந்த ஆண்டுக்கான கிராம உதவியாளர் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 2299 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பதவியின் பெயர்: கிராம உதவியாளர்
    • கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
    • மாத ஊதியம்: சிறப்பு காலமுறை ஊதியம் Level 06 (ரூ.11,100-ரூ.35,100/)
    • வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் GEN 32, ST/SC/DNC/MBC/BCM/BC – 37

    விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    2025 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது

    கிராம உதவியாளர் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    செங்கல்பட்டு: Notification 1 | Notification 2

    ஈரோடு: Notification 1 | Notification 2

    கிராம உதவியாளர் காலியிடம் அரசாணை GO: Click here

    TN Village Assistant Application Form Download: Click here

  • TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

    TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

    Tnpsc group 4 hall ticket download 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படுள்ளது.

    Tnpsc group 4 hall ticket download 2025
    TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

    தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்திற்குச் (tnpsc.gov.in) சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு

    டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்காக, கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    முதற்கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30க்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

    இந்தத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது டிஎன்பிஎஸ்சி இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை tnpsc.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் சென்று தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    கிராம நிர்வாக அலுவலர், ஜூனியர் உதவியாளர், ஜூனியர் வருவாய் ஆய்வாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் டைப்பிஸ்ட், தட்டச்சர், தனிப்பட்ட எழுத்தர், கள உதவியாளர், வனக் காவலர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது.

    ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி?

    • ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்ய டிஎன்பிஎஸ்சி OTR தளத்துக்கு நேரடியாக செல்ல வேண்டும்
    • அதில் “ஏற்கெனவே பதிவு செய்தோர் (உள்நுழைய)” கிளிக் செய்யவும்
    • அதன் பிறகு உங்களுடைய அதன் பிறகு உங்களுடைய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளிட்டு உங்களுடைய ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    Download TNPSC Group 4 Hall Ticket – Click here ( Direct Link)