Category: தமிழ்நாடு

  • SBI Online Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    SBI Online Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    SBI Online Bike Loan: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிலிருந்து பைக் லோன் பெறுவதற்கு ஒரு சிறந்த லோன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மிக குறைந்த வட்டியில் நீங்கள் இருசக்கர வாகனம் வாங்க முடியும். எப்படி வாங்குவது அதற்கான தகுதிகள் என்பதை பற்றி பார்ப்போம்.

    SBI Super Bike Loan
    Bike Loan: SBI சூப்பர் பைக் லோன் பெறுவது எப்படி? இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

    இந்த எஸ்பிஐ சூப்பர் பைக் லோன் ஒரு 1.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை நீங்கள் கடன் பெறலாம் பெறலாம். நீங்கள் சுய தொழில் செய்து கொண்டிருந்தாலும் அல்லது விவசாயம் செய்து கொண்டிருந்தாலும் நீங்கள் இந்த குறிப்பிட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சூப்பர் பைக் லோன் திட்டத்தில் கடனை பெறலாம்.

    நீங்கள் ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் சம்பாதிப்பவராக இருந்தால் மட்டும் போதுமானது, இந்த கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்த பட்சம் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் என்ற தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் ஆண்டுக்கு 3 லட்சம் வருமானம் சம்பாதிப்பவராக இருந்தால் மட்டும் போதுமானது இந்த கடன் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவராக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பி வராக இருக்க வேண்டும் என்ற தகுதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூப்பர் பைக் லோன் கடன் திட்டத்தில் நீங்கள் இந்த கடனை மொத்தமாக 5 ஆண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான வட்டியாக 8.95% வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். இதற்கு சுய தொழில் செய்பவர்கள், விவசாயிகள், ஐடி வேலையில் இருப்பவர்கள், அரசு வேலை இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் ஆண்டுக்கு 3 லட்சம் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், இந்த கடன் பெறுவதற்கு தகுதியானவராக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

    SBI Super Bike Loan Online
    SBI Super Bike Loan Online

    இந்த வங்கி கடனை பெறுவதற்கு ஸ்டேட் பேங்க் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். வங்கி உங்களது உன்ன பத்தி சரி பார்த்து தகுதி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு கடன் வழங்கும்.

    இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இங்கே பார்க்கவும். மேலும் இந்த கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

    Also Read

  • தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு விடுமுறை நாட்காட்டி 2025-26 வெளியீடு

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கல்வியாண்டு விடுமுறை நாட்காட்டி 2025-26 வெளியீடு

    TN School Holidays 2025 Calendar: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் (2025-2026) விடுமுறை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழக பள்ளிகளுக்கான விடுமுறை நாட்காட்டி 2025-26 ஆண்டுக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காலாண்டு தேர்வு முதல் பருவம் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் காலாண்டு விடுமுறையானது செப்டம்பர் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரண்டாம் பருவம் அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் தொடங்குகிறது. அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை 23 டிசம்பர் முதல் ஆரம்பம். முழு தகவலையும் கீழே உள்ள PDF டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளவும்.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விடுமுறை நாட்காட்டி 2025-26 – Download PDF

    Also Read

  • வெளுத்து வாங்கப் போகும் மழை! இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை..

    வெளுத்து வாங்கப் போகும் மழை! இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை..

    TN Rain Update: இன்று மே,19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    TN Rain Update
    வெளுத்து வாங்கப் போகும் மழை! இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை..

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு தவித்தனர். எனவே எப்போது வெயில் குறையும் என காத்திருந்த மக்களுக்கு தென் மேற்கு பருவமழை தொடக்கமே அதிரடியாக வெப்பத்தை குறைத்துள்ளது. இந்தாண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. 

    இதனால் கேரளாவில் விரைவில் மழை கொட்டப்போகிறது. இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். 

    பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக கன முதல் மிதனமான வழை பெற்ற வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் எங்கெல்லாம் மழை.?

    இன்று (19-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    20-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சுரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Read also: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்! ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம், விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்! ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம்,  விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்! ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம், விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

    Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

    Kalaingar Magalir Urimai Thogai : தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

    கலைஞர்  மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது.

    மக்களுடன் முதல்வர் என்ற அந்த சிறப்பு திட்ட முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திடத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

      அப்படி விண்ணப்பிக்கும்போது, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வாங்கி பாஸ்புக், மொபைல் எண் கட்டாயம் வேண்டும். 

    ஆதார் அட்டை மட்டும் இருந்து குடும்ப அட்டை இல்லாதவர்களாக இருப்பின் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. 

    எனவே, இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் முதலில் குடும்ப அட்டை பெற்று பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்கவும். 

    அதேபோல், விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து வதிமுறைகளுக்கும் உட்பட்டவரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

    இல்லையென்றால் கலைஞர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் பயனாளியாக தேர்வுசெய்யப்படமாட்டீர்கள். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பொருள் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு மிகாமல் நன்செய் நிலங்களும், 10 ஏக்கருக்கு மிகாமல் புன் செய் நிலங்களும் இருந்தால் கூட விண்ணப்பிக்கலாம். நோய்வாய்ப்பட்ட சிலருக்கு சிறப்பு விலக்குகள் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  

    அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர் ஆகியோரின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தில் சேர முடியாது. 

    Read also: TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

  • TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN 10th Result 2025: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். TN Board 10th Result 2025 Live : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9:10 மணிக்கு வெளியாகிறது. மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற இணையதள முகவரிகள் மூலம் முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

    tn10thresults2025
    TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

    TN 10th result 2025 link: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறியும் வழிமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்:

    மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. அதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகின. இந்நிலையில் தான், இன்று மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி , 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 16 காலை 9 மணிக்கும், 11ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளன.

    தேர்வு முடிவுகளை 4 வழிகளில் காணலாம். எப்படி?

    இணைய வழி: மாணவர்கள் 10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைனிலேயே காணலாம். குறிப்பாக, dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். எனினும் இதற்கு தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

    மத்திய அரசு இணையதளம்: மாநில அரசு இணையதளத்தில் காண முடியவில்லை எனில், results.digilocker.gov.in என்ற மத்திய அரசின் இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள்‌ தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

    பள்ளிகளில் பார்க்கலாம்: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம்.

    குறுஞ்செய்தி வழியாகவும் காண முடியும்: மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்பட உள்ளன.

    TN SSLC 1oth Results 2025 Check Online : 10-ம் வகுப்பு முடிவுகள் அறிந்துகொள்ள தேவையானவை என்ன?

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதிய மாணவர்கள் அவர்களின் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களின் மூலம் முடிவுகள் அறிந்துகொள்ளலாம்.

    TN 10th Results Live : சரியாக 9:10 AM மணிக்கு தேர்வு முடிவுகள்

    தமிழ்நாடு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சரியாக 9:00 மணிக்கு வெளியாக உள்ளது. மாணவர்கள் https://tnresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரியில் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

    TN 10th Results Live

    TN SSLC 1oth Results 2025 :முடிவுகளை அறிந்துகொள்ள படிப்படியான வழிமுறை இதோ

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் https://tnresults.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம். மாணவர்களின் பதிவெண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (DOB) ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
    படி 1 : மேல் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு இணையதளத்திற்கு செல்லவும்.
    படி 2 : அதில் முடிவுகளை அறிந்துகொள்ள மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
    படி 3 : Get Marks என்பதை கிளிக் செய்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    Result Link 1 :- https://tnresults.nic.in/

    Result Link 2 :- https://results.digilocker.gov.in/