இன்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து விற்பனையாகி வந்த நிலையில் தற்போது சவரனுக்கு 800 உயர்ந்திருக்கிறது இதன் மூலம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது மேலும் கிராமொன்று நூறு ரூபாய் உயர்ந்து 5510 ரூபாய்க்கு விற்பனையாகிறது இஸ்ரேல் ஹமாசுடையான போரால் இந்த விலை ஏற்றம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதாவது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் உடைய அந்த போர் தொடங்குவதற்கு முன்பாக தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்தது. இது பொது மக்களுடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது ஆனால் அந்த இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடங்கியதற்கு பிறகு தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏறு முகத்தில் இருந்து வருகிறது. இது இந்த போர் காரணமாக தினம் தினம் தங்கத்தின் விலை ஏற்றமாக காணப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் 5,410 என்று இருந்த நிலையில் தற்போது மாலைகள் வெளியான புதிய அறிவிப்பின்படி 5510 ரூபாயாக ஒரு கிராமிற்கு தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது இதன் மூலமாக ஒரு கிராமிற்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் என்று அளவிற்கு தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே இந்த பண்டிகை காலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதேபோன்று வெள்ளியின் விலை இப்போது விலை உயர்ந்திருக்கிறது. காலையில் ஒரு கிராம் 75 ரூபாய் 50 காசுகள் என்று இருந்த நிலையில் தற்போது 77 ரூபாயாக வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது. தங்கத்தின் விலை கிட்டத்தட்ட தற்போது ஒரு சவரன் நாம் 44 ஆயிரம் ரூபாயை கடந்திருக்கிறது இந்த போர் சூழல் தொடரும் வரை தங்கத்தின் விலை தொடர்ந்து இதே நிலையில் தொடர்ந்து ஏறிக் கொண்டே இருக்கும் என்பது தான் துறை சார்ந்தவர்களின் தகவல்களாக இருக்கின்றன.