தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் வெப்பம் இயல்பிலிருந்து 2 – 4 அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.
மேலும் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 15ம் தேதி வரை மிதமான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல்.
புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு. மேலும் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.