IPPB IT Executive Recruitment 2024: அஞ்சல் துறை பேமெண்ட் வங்கியில் 54 IT Executive வேலைவாய்ப்பு பணியிடங்கள் contractual அடிப்படையில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ippbonline.com/- ல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://ibpsonline.ibps.in/ippblemarc24/ என்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த IPPB IT Executive Recruitment 2024 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ வேலை வாய்ப்பு அறிவிப்பை முழுவதும் படித்து கல்வித் தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றை முழுவதும் படித்து பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும். மூன்று விதமான பதவிகளுக்கு மொத்தமாக 54 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்
- Executive (Associate Consultant)
- Executive (Consultant)
- Executive (Senior Consultant)
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் B.E/B.Tech அல்லது BCA/B.Sc (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA பெற்றிருக்க வேண்டும்
தேர்வு கட்டணம்
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 750 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் ரூ. 150 செலுத்தினால் போதுமானது.
எப்படி விண்ணப்பிப்பது?
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/ippblemarc24/ செல்லவும்.
- “Click here for New Registration” என்பதை கிளிக் செய்து உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்யவும்.
- பிறகு உங்களுக்கு அனுப்பப்படும் Registration Number மற்றும் Password பயன்படுத்தி லாகின் செய்து உங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
- இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை preview செய்து சரி பார்க்கவும்.
- கடைசியாக உங்கள் விண்ணப்பத்தை Submit செய்யவும்.
முக்கியமான நாட்கள்
- விண்ணப்பத்தின் ஆன்லைன் பதிவு ஆரம்பம் நாள்: 04/05/2024 10:00 AM
- விண்ணப்பப் பதிவு கடைசி நாள்: 24/05/2024 11:59 PM
அதிகாரப்பூர்வ காலிப் பணியிட அறிவிப்பு https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf மூலமாக அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு https://ibpsonline.ibps.in/ippblemarc24/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.