Kalaignar Magalir Urimai Thogai Application Form: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம்: தமிழ்நாட்டில் மகளிர் காண உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான இறுதி வரைவு முறையை நேற்றைய தினம் தமிழக அரசு முழுவதுமாக நிர்ணயம் செய்து அதற்கான அரசு வரைவு முறையை வெளியிட்டது. அதன்படி யாரெல்லாம் உரிமை தொகை ரூ 1000 பெற தகுதியானவர்கள் என்பதற்கான அனைத்து தகுதிகளையும் தமிழக அரசு வெளியிட்டது.
Kalaignar Magalir Urimai Thogai Application Form
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வெளியாகி உள்ளது இந்த விண்ணப்பத்தை முழுவதும் பூர்த்தி செய்து தாங்கள் அருகாமையில் உள்ள நியாய விலை கடையில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த விண்ணப்பத்தின் இறுதியில் உறுதிமொழி ஒன்றை கொடுத்துள்ளார்கள். அந்த 11 உறுதிமொழிகளுக்கும் சம்மதம் தெரிவித்து விண்ணப்பதாரர் கையொப்பம் இட வேண்டும். உறுதிமொழிகள் அனைத்தும் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி நிர்ணயம் செய்யப்பட்ட அரசின் வரைவு முறை ஆகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி?
விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு முன்பாக நீங்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- மின் கட்டண ரசீது
- வங்கி பாஸ்புத்தகம்.
மகளிர் உரிமை தொகை திட்டம் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யும் முறை:
- முதலில் உங்கள் ஆதார் எண் குறிப்பிடவும்
- உங்கள் பெயரை குறிப்பிடவும்
- உங்கள் குடும்ப அட்டை எண் நிரப்பவும்
- உங்கள் திருமண நிலையை குறிப்பிடவும்
- உங்களுடைய தொலைபேசி எண்ணை குறிப்பிடவும்
- அதன் பிறகு தற்போது சொந்த வீடு வாடகை வீட்டில் வசிக்கிறீர்களா என்பதை பற்றிய விவரங்களையும் நீங்கள் எந்த மாவட்டத்தில் வசிக்கிறீர்கள் பற்றிய விவரத்தையும் தெரிவிக்கவும்.
- தற்போதைய மின் இணைப்பு எண் குறிப்பிடவும்
- வங்கிக் கணக்கு எண் வங்கியின் பெயர் வங்கியின் கிளையின் பெயர் ஆகியவற்றை குறிப்பிடவும்
- அடுத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் பெயர்களை குறிப்பிடவும்
- அவர்களின் வயது தொழில் மாத வருமானம் வருமான வரி செலுத்துபவரா ஆம் இல்லை என்பதை தெரிவிக்கவும்
- அடுத்து உங்களுடைய சொத்து விபரங்களை குறிப்பிடவும் சொந்த வீடு அரசு திட்டத்தின் மூலம் நிதி பெற்றவரா என்பதை குறிப்பிடவும்
- நில உடைமைகள் விவரங்களை குறிப்பிடவும் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்த நிலம் உள்ளதா? ஐந்து ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கருக்கு புஞ்சை நிலம் உள்ளதா என்பது பற்றி விவரங்களை ஆம் இல்லை என டிக் செய்யவும்
- அடுத்து வாகன விவரங்களில் குடும்ப உறுப்பினர்கள் யாரால் யாரிடமாவது கார் ஜீப் டிராக்டர் கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் உள்ளதா என்பதை குறிப்பிடவும்.
Download Kalaignar Magalir Urimaithogai Application Form:
இறுதியாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட 11 உறுதிமொழிகள் அதாவது கலைஞர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள இந்த 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு உறுதி மொழியில் கையொப்பமிட்டு உங்களுடைய விண்ணப்பத்தை அருகில் உள்ள நியாய விலை கடை அல்லது அரசு குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை செலுத்தும் இடத்தில் நீங்கள் செலுத்தலாம்.