MOIL Recruitment 2024: மத்திய அரசின் இரும்பு அமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய MOIL நிறுவனத்திலிருந்து Graduate Trainee, Management Trainee, Manager உட்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
MOIL Recruitment 2024: இதில் மொத்தமாக 44 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Graduate Trainee, Management Trainee, Manager உட்பட்ட பதவிகள் காலிப்பணியிடங்களாக நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21/03/2024 ஆகும்.
ஆன்லைன் கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
21/03/2024 அன்றைக்கு 30 வயது நிரம்பியராக இருத்தல் கூடாது, மேலும் மேனேஜர் சர்வே பதவிக்கு 35 வயது நிரம்பியவராக இருக்கக் கூடாது, அரசு விதிகளின்படி இடம் ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
இந்த பதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
- இப்ப பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://ibpsonline.ibps.in/moilfebr24/ செல்லவும்.
- New Registration என்ற Link மூலமாக உங்களுடைய விண்ணப்பத்தை பதிய வேண்டும்.அதன் பிறகு Login செய்து உங்களை விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 21/03/2024.
இந்த வேலைவாய்ப்புக்கான முழு தகவலையும் கொடுக்கப்பட்டுள்ள https://moil.nic.in/upload_files/0ez8dxi.pdf மூலமாக முழு வேலைவாய்ப்பு அறிவிப்பை டவுன்லோட் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.