சென்னை சுங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற எழுத்து தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை சுங்கத்துறையில் கிளர்க், கேண்டீன் அட்டென்டன்ட், கார் டிரைவர் உட்பட 17 காலிப் பணியிடங்களுக்கான சுங்கத்துறை அலுவலகம் வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த வேலை வாய்ப்பிற்கு மொத்தம் 12000 பேர் விண்ணப்பித்த நிலையில், 1600 அவர்களுக்கு சென்னை சுங்குத்துறை அலுவலகத்தில் தேர்வு நடைபெற்றது. குறிப்பாக இந்த தேர்வானது ஒரு மணி நேரமாக நடைபெற்ற நிலையில், 50 மதிப்பெண்களுக்கு மொத்தமாக தேர்வு நடந்தது. குறிப்பாக இந்த தேர்வில் 1600 பேர் தேர்வு எழுதி சென்னையில் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் நடுவில் திடீரென ஒரு சிலர் காப்பி அடிப்பதாக சுங்குத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தெரிய வந்தது.
இந்த தகவல் அடிப்படையில் சுங்கத்துறையாக துறை அதிகாரிகள் தேர்வில் காப்பி அடித்த கூறப்படும் அந்த நபரை பிடித்து விசாரணை செய்யப்படும்போது இடுப்பில் சிறிய அளவிலான ப்ளூடூத் மற்றும் தகவல் தொடர்புகளை கருவிகளை பயன்படுத்தியதாக தெரியவந்தது. காதில் ப்ளூடூத் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி தேர்வில் காப்பி அடித்து எழுதி வந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அவரிடம் விசாரணை மேற்கண்ட போது இத்தேர்வு எழுதிய சுமார் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் இதேபோன்று சில சிறியதாக ப்ளூடூத் பயன்படுத்தி காப்பி அடித்தது சுங்குத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது உடனடியாக அந்த 30 மேற்பட்ட வட மாநில மாணவர்களை பிடித்து அருகில் உள்ள வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் மூலம் விசாரணை செய்து வருகின்றனர்
குறிப்பாக இதே போன்ற நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இதேபோன்று வட மாநில தேர்வர்கள் காப்பி அடித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, குறிப்பாக எந்த விதமான சோதனை இல்லாமல் இந்த தேர்வு அனுமதிப்பதாக சில மாணவர்கள் குற்றம் சாட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.