புதுச்சேரி – கடலூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட கூர்மையான சென்டர் மீடியனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!
புதுச்சேரி-கடலூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டர் மீடியன் மிகக் கூர்மையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி-கடலூர் நெடுஞ்சாலைகள் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. முன்பு அமைக்கப்பட்ட சென்ட்ரல் மீடியனை விட தற்போது உயரமாகவும் கூர்மையாகவும் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்தில் யாரேனும் தவறி விழும்பட்சத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் என்பவர் அதன் கூர்மை தன்மையை விளக்கும் வகையில் சென்டர் மீடியினில் வெங்காயத்தை வெட்டி காண்பித்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் இது போன்ற தடுப்புச் சுவர்கள் அமைப்பதன் மூலமாக எதிர்பாராத விதமாக யாரேனும் கீழே விழும் பட்சத்தில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் என்பதை சமூக ஆர்வலர் விளக்கம் தந்து உள்ளார்.