Railway ICF Apprentice Online Form 2024: இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை, தமிழ்நாட்டில் இருந்து 1010 அப்ரண்டிஷிப் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அறிவிப்பினை https://pb.icf.gov.in. என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக 22/05/2024 இருந்து 21/06/2024 அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர்
கார்பெண்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷின்ஸ்ட், பெயிண்டர்வெல்டர், MLP – ரேடியாலஜி
கல்வித் தகுதி
பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தேசிய ட்ரேட் சான்றிதழ்(ITI) , பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் கணிதம் மற்றும் அறிவியல், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் இயற்பியல்,வேதியியல் மற்றும் உயிர்கள் பாடம் படித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு
இந்த ITI பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21/06/2024. அன்றைய தேதியின் படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 24. ITI அல்லாத மற்ற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 22
மாத ஊதியம்
மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள பதவிகளுக்கு மாத ஊதியமாக ரூபாய் 6000 முதல் 7000 வரை வழங்கப்படுகிறது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- முதலில் அதிகாரப்பூர்வ இணையான https://pb.icf.gov.in. செல்லவும்.
- முதலில் முதல் கட்ட பதிவை முடித்து உங்களுக்கான விண்ணப்ப எண்பெறவும்.
- அதன் பிறகு உங்களுடைய விண்ணப்பையின் மற்றும் பாஸ்வேர்டு மூலமாக லாகின் செய்து உங்களுடைய தேவையான ஆவணங்கள் மற்றும் போட்டோ ஆகியவற்றை அப்லோட் செய்யவும்.
- விண்ணப்பத்தை சரி பார்த்து விண்ணப்ப கட்டணத்தை ரூபாய் 100 ஆன்லைன் மூலமாக செலுத்தவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
இறுதி பட்டியல் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
இந்த வேலைக்கான தகுதியை பத்தாம் வகுப்பு (10th) மார்க் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
முக்கியமான நாட்கள்
ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள் – 22/05/2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 21/06/2024till 17.30 Hrs
அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள https://pb.icf.gov.in/act/notification.pdf லிங்க் மூலம் டவுன்லோட் செய்து முழு அறிவிப்பையும் படித்து பார்த்து பின்பு தெரிந்து கொள்ளவும்.
இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் https://pb.icf.gov.in/act/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்