RRB Technician Recruitment 2024: இந்திய ரயில்வேயிலிருந்து 9144 டெக்னீசியன் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
RRB Technician Recruitment 2024: 09/03/2024 முதல் 08/04/2024 இரவு 11:59 PM வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் 1092 காலிப் பணியிடங்களும் மற்றும் டெக்னீசியன் கிரேட் 3 இதில் 8052 காலிப் பணியிடங்களும் ஆகிய பதவிகளுக்கு மொத்தமாக 9,144 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் – இந்த பதவிக்கு 29200 என்ற ஊதிய விகிதத்தில் லெவல் 7 சம்பளம் தரப்படுகிறது. டெக்னீசியன் கிரேட் 3 – பதவிக்கு லெவல் 2 என்ற 19,900 என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் தரப்படுகிறது.
இந்தப் பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும் அதிகபட்ச வயது 30 முதல் 33 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் (EBC) 250 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தினால் போதும்.
இந்தப் பதவிகளுக்கான தேர்ந்தெடுக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- கணினி வழி தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
- மெடிக்கல் டெஸ்ட்
கணினி தேர்வு மொத்தமாக 100 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடத்தப்படுகிறது.
மேலும் இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பை பற்றிய முழு தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://www.rrbchennai.gov.in/downloads/cen-022024/Detailed_CEN_02_2024_English.pdf பார்க்கவும்.
இந்த பதவிகளுக்கு https://www.rrbapply.gov.in/ என்ற ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.