இன்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்ற அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் நாளை ஆகஸ்ட் 15 குடியரசு தின விழா அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடி அமாவாசை மற்றும் பாகுபலியை கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை அன்று குழித்துறை நகராட்சியில் தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக பாகுபலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை ஒட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு விடுமுறை தொடர்ந்து ஆகஸ்ட் 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பி என் ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அரசு அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு சாறும் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கியில் இவற்றிற்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் 9ஆம் தேதி என்று வேலை நாளாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.