நாளை செங்கல்பட்டு மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடியார் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த அறிவிப்பில் பங்காரு அடிகளார் அவர்களின் சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி சடங்கு நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற பங்காரு அடிகளார் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.
இதனை ஒட்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ள அறிவிப்பில் செங்கல்பட்டு மதுராந்தகம் கோட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 20.10.2023 அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.