தமிழ்நாட்டில் பல்வேறு உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள் காரணமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் செப்டம்பர் 11ம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இமானுமாள் சேகரனார் நினைவு தினம் வருகிற செப்டம்பர் 11ம் தேதி கொண்டாடப்படும். அந்த வகையில் இமானுவேல் சேகரன் அவர்கள் குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 முதல் பல முன்னெச்சரிக்கை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்புவெளியிட்டுள்ளார் அது மட்டும் இல்லாமல் சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பர் 11 பள்ளிகளுக்கு கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள உத்தரவில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இம்மானுவேல் சேகரன் குருபூஜை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று அறிவிப்பு கொடுத்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்கள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டத்தில் உள்ள கீழடி அருங்காட்சியும் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி இயங்காது எனவும் அருங்காட்சிய பார்வையாளர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.