Solar Rooftop Yojana: மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் சூரிய மின்தகடு அமைக்க அந்தந்த பகு திகளில் உள்ள தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் கீழ் வீட்டு மின் இணைப்பு கொண்ட மின்நுகர் வோர் தங்கள் வீட்டில் சுமார் 100 சது ரஅடி பரப்பில் 1 கிலோ வாட்டுக்கான சூரிய மின்தகடு அமைத்தால் தின மும் 4 முதல் 5 யூனிட் மின்சாரமும், 2 கிலோ வாட் சூரிய மின்தகடு மூலம் 5 முதல் 10 மெகாவாட் மின்சாரமும், 3 கிலோவாட் சூரிய மின்தகடு மூலம் 10 முதல் 15 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.
இந்த சூரிய மின்தகடு அமைக்க மத் திய அரசுதற்போதுமானியமும் வழங்கு கிறது. அந்த வகையில், 1கிலோ வாட்கு சியமின் தகடு அமைக்க சுமார் ரூ.55,000 முதல் ரூ.65000 வரை செலவாகும் நிலை யில் அரசு ரூ.30000 மானியமாக வழங்கு கிறது. அதேபோல, 2 கிலோ வாட் சூர் யமின்தகடு அமைக்க சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம் வரையும் செலவா கும் நிலையில் மானியமாக ரூ.60,000- மும், 3 கிலோ வாட் சூரிய மின்தகடு அமைக்க சுமார் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.80 லட்சம் வரை செலவாகும் நிலை யில் மானியமாக ரூ.78,000-மும் வழங் கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்க விரும்பும் மின்நுகர்வோர் ஆதா ருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், ஆறுமாத காலத்துக்கான மின் சார ரசீது உள்ளிட்ட முழு விவரங்களு டன் அந்த பகுதிகளிலுள்ள தபால்கா ரரையோ அல்லது அஞ்சல் அலுவல கத்தையோ மார்ச் 8-ஆம் தேதிக்குள் தொடர்பு கொள்ளலாம் என தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசின் இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ https://pmsuryaghar.gov.in/ என்ற பக்கத்தைப் பார்க்கவும்.