TN Election Polling Station Queue Status Online: தமிழகம் முழுவதும் நாளை 18 வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்தலில் முதல் பகுதியாக தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை (19.04.2024) நடைபெற உள்ளது.
கடுமையான கோடை காலம் என்பதால் பலரும் ஓட்டு போடுவதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இந்த நிலைமையை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் புதிய வசதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாக்குச்சாவடியில் எத்தனை வாக்காளர்கள் வரிசையில் நிற்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லலாம்.
வாக்குச்சாவடியில் வரிசையில் இருப்பவர்களின் எண்ணிக்கை.. எவ்வாறு தெரிந்து கொள்வது?
- முதலில் https://erolls.tn.gov.in/Queue/ என்று அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் உங்கள் மாவட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு உங்களுடைய சட்டசபை தொகுதியை தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு உங்களுக்கான உங்கள் ஊரில் இருக்கும் வாக்குச்சாவடியை தேர்ந்தெடுக்கவும். ( தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி வாக்கு சீட்டு மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்)
- இப்பொழுது உங்கள் வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான நேரடி அறிவிப்புகள் 19/04/2024 at 7.00 A.M. முதல் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Simply waste