TN 10th result 2024 link: சென்னை, மே 8: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப் படவுள்ளன.
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவ தும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப். 8 வரை நடை பெற்றது. இந்த தேர்வெழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர் கள், 16,488 தனித்தேர்வர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 235 சிறைக் கைதிகள் என மொத் தம் 9 லட்சத்து 26,663 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 9.08 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர்.
இதையடுத்து மாணவர்க ளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுதும் 88 தேர்வு முகாம்களில் ஏப். 12- இல்தொடங்கி 22-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.அதன் பின் இணைய தளத்தில் மதிப் பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதரப் பணிகளும் முடிக்கப்பட் டுவிட்டன. தொடர்ந்து ஏற்கெ னவே அறிவித்தபடி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள் ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ள லாம். பள்ளி மாணவர்கள் தாங் கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றிதேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இது தவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Tamilnadu 10th public exam result 2024 – Click here