வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் கீழ் வரும் இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கு 09.08.2023 முதல் 29.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
- அலுவலக உதவியாளர்
- காவலர்
கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர் பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு
01.07.2023 ஆம் ஆண்டு தேதி நிலவரப்படி குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்த பட்டோர்மற்றும் சீர் மரபினர் / பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினர் – 34 வயது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயது.
விண்ணப்பக் கட்டணம்
இந்த வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தமிழ்நாடு அரசு வேலைக்கு எந்த ஒரு விண்ணப்பம் கட்டணமும் செலுத்த தேவையில்லை
எவ்வாறு விண்ணப்பிப்பது
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தை 09.08. 2023 முதல் 29.08.2023 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட முகவரியில் இருந்து பெற்று அதை முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
துணை இயக்குனர் (நிர்வாகம்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையராகம் (வேலைவாய்ப்பு பிரிவு), எண் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க தொழில்பேட்டை கிண்டி, சென்னை -6000 32