tn pwd apprentice recruitment 2024 notification: தமிழ்நாடு பொதுப்பணி துறையில் இருந்து 720 காலிப் பணியிடங்கள் பொறியியல், டிப்ளமோ, கலை அறிவியல் வணிகம் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் இருந்து 720 அப்ரண்ட்ஸிப் பயிற்சிக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் டிப்ளமோ படித்தவர்களும், கலை அறிவியல் வணிகம் முதலிய துறைகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் முடித்தவர்கள் சிவில் இன்ஜினியரிங் கட்டிடக்கலை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தமாக 500 காலிப் பணியிடங்கள் இதற்கு நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ. 9000 வழங்கப்படுகிறது.
இதே துறைகளில் டிப்ளமோ படித்தவர்கள் மொத்தமாக 120 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ. 8000 வழங்கப்படுகிறது.
இளங்கலை பட்டப்படிப்பு B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM etc மொத்தமாக 100 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ. 9000 வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலிப்பணியிடங்கள் ஒரு வருடம் அப்பன்டிஸ்ட் பயிற்சி மட்டும் வழங்கப்படுகிறது.
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது. ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://nats.education.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கு பார்க்கவும்