TN TRB Assistant Professor Recruitment 2024: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 4000 உதவி பேராசிரியர் வேலை வாய்ப்பு.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த காலி இடம் நிரப்பப்பட உள்ளது இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29. 04.2024 அன்று 05:00 pm ஆகும். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.trb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மொத்த காலிடம்
இந்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் உதவி பேராசிரியர் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமாக 4000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்வித் தகுதி
- இந்த உதவி பேராசிரியர் வேலைவாய்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள 65 பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றில், 55 சதவிகித மதிப்பெண்கள் உடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் மத்திய அரசின் தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது Ph.d பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் முழுமையான கல்வித் தகுதிகள் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு
உதவி பேராசிரியர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 57 வயது 01.07.2024 நிரம்பியதாக இருத்தல் கூடாது.
ஊதியம்
தமிழ்நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பணியமர்த்தப்படும் இந்த உதவி பேராசிரியர்களுக்கு 10th நிலை ஊதியமான ரூபாய் 57,700 முதல் 1,82,400 என்ற ஊதிய விகிதத்தில் சம்பளம் தரப்படுகிறது.
தேர்வு செய்யும் முறை
- எழுத்து தேர்வு ( 200 மதிப்பெண்கள் கொண்ட எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது)
- நேர்முகத் தேர்வு ( 30 மதிப்பெண்கள் கொண்ட நேர்முகத் தேர்வுதேர்வு நடத்தப்படும்.
- எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இறுதியாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
முக்கியமான நாட்கள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க 28.03.2024 முதல் 29.0402024 வரை விண்ணப்பிக்கலாம்
- எழுத்து தேர்வு நடைபெறும் நாளாக 04.08.2024 அறிவிக்கப்பட்டுள்ளது
- நேர்முகத் தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்
இந்த உதவி பேராசிரியர் பணிகளுக்கு ஆன்லைனில் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள https://trb.tn.gov.in/admin/pdf/1492415566AP%20Notification%20Final%2013.03.2024.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.