TNPSC Group 1b and 1c Notification: தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி I-B மற்றும் I-C பணிகள் ஆகிய இரு பதவிகளை அறிவித்துள்ளது. இதில் மொத்தமாக 29 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்
- உதவி ஆணையர் (இந்து சமய அறநிலைத்துறை)
- மாவட்ட கல்வி அலுவலர் (தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை)
கல்வித் தகுதி
உதவி ஆணையர் :- ஏதேனும் ஒரு இளங்கலை பட்டத்துடன் சட்டப்படிப்பு மற்றும் தேவையான அனுபவங்கள்.
மாவட்ட கல்வி அலுவலர்:- குறிப்பிட்ட பாடங்களில் முதுநிலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியியல் அல்லது கற்பித்தல் முடித்திருக்க வேண்டும்.
மொத்த காலியிடம்
உதவி ஆணையர் பிரிவில் 21 காலியிடங்களும், மாவட்ட கல்வி அலுவலர் பிரிவில் 8 காலியிடங்களும், மொத்தமாக இந்த பணிகளுக்கு 29 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யும் முறை
மூன்று நிலை தேர்வுகள் மூலமாக விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- முதல் நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
- நேர்முகத் தேர்வு
எவ்வாறு விண்ணப்பிப்பது
- அதிகாரப்பூர்வ இணையதளமான https://apply.tnpscexams.in/ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- இணையதளத்திற்கு சென்ற பிறகு combined civil services examination- (group i-b and i-c services) என்று அறிவிப்பை கண்டறிந்து “Apply Online” மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படம் கையெழுத்து ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டி இருக்கும்.
- தேர்வு கட்டணமாக 100 ரூபாய் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.
- அதன் பின் உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்து இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்
- விண்ணப்பத்திற்கான ஆரம்ப நாள்: 23.04.2024
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.05.2024 11.59 பி.ப
- விண்ணப்பத்தை திருத்துவதற்கான நாள்: 27.05.2024 12.01 மு.ப முதல் 29.05.2024 11.59 பி.ப வரை.
- முதல் நிலை தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 12.07.2024 2.30 பி.ப முதல் 5.30 பி.ப வரை
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2024_TAM_.pdf மூலமாக பதிவிறக்கம் செய்து முழுவதும் படித்து பார்த்த பின்பு விண்ணப்பிக்கவும்.
இந்த வேலைவாய்ப்பை https://apply.tnpscexams.in/ என்று அதிகாரப்பூர்வஇணையதளமாக விண்ணப்பிக்கலாம்.