TNPSC Group 4, 2024: ஏற்கனவே குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது.
குரூப் 4, 2024 தேர்வுக்கான காலி பணியிடங்கள் அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி, வனக் காவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜுன் 9 ம் தேதி நடைபெற்றது.
சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15.8 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
அதன் பின்னர் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில், குரூப் 4, 2024 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வந்த நிலையில் தற்போது அதற்கான கணக்கெடுப்பு நடைப்பெற்று வருவதாகவும், அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டின்பிஎஸ்சி தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.