TNSTC Driver Conductor வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் ஆகிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. TNSTC Driver Conductor Recruitment 2023 மொத்தமாக 812 கால பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பின் கீழ் வரும் (TN Govt Jobs 2023) இந்த காலிப்பணியிடங்கள் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் ஆகிய இரண்டும் ஒரே பதவியாக இணைந்த பதவியாக நிரப்பப்பட உள்ளது. அதாவது பணியில் சேர்பவர் ஓட்டுனராகவும் மற்றும் நடத்துனராகவும் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ( SETC, MTC, மற்றும் விழுப்புரம் கோட்டம் நீங்கலாக) தமிழக அரசு ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்கள் இருப்பதற்கான அரசாணை வெளியிட்டது இதில் மொத்தம் 812 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இவர்கள் ஓட்டுனராகவும் நடத்துனராகவும் ஒரு சேர செயல்பட வேண்டும்.
TNSTC Driver Conductor Recruitment 2023
அதன்படி கும்பகோணம் கோட்டத்தில் 174 பேரும் சேலம் கோட்டத்தில் 254 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர் அதேபோன்று கோவை கோட்டத்தில் 60 பேரும் மதுரை கோட்டத்தில் 136 பேரும் நெல்லை கோட்டத்தில் 188 பெரும் இந்த ஓட்டுனர் நடத்துனர் பதவிக்கு வந்து தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பணிந்த ரெட்டி அவர்கள் அரசாணை மூலம் தெரிவித்துள்ளார்
தகுதிகள்:
- SSLC, தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- கனக வாகனங்கள் இயக்க உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் அதில் 18 மாதங்கள் முன் அனுபவம் நிச்சயமாக தேவை
- கூடவே நடத்துனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
- மேலும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகும் பப்ளிக் சர்வீஸ் பேட்ஸ்
- முதலுதவியல் அடிப்படைச் சான்றிதழ்
- குறைந்தபட்ச எடை 50 கிலோ
- நல்ல கண் பார்வை மற்றும் உடல் தகுதி சான்று
ஊதியம்:
இந்த பதவிக்கான ஊதியம் ரூ. 14,700 முதல் ரூ. 56,200 வரை அரசு நிர்ணயிக்கப்பட்ட நிரந்தர ஊதிய வேகத்தில் சம்பளம் வழங்கப்படும்.
மேலும் இந்த வேலை வாய்ப்புக்கான வயது, கல்வித் தகுதி, ஓட்டுநர் நடத்துனர் உரிமங்கள், வேலை வாய்ப்புகள் முன்னுரிமை போன்ற விஷயங்கள் இத்தேர்வில் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
TNSTC Recruitment 2023 Notice – Click here
Source Link – Click here