TNSTC Recruitment 2025: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு 2025: தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

tnstc recruitment 2025 drivers and conductors apply online: தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. இதில் சுமார் 1.13 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதியும் அறிமுகப்படுத்த செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கல்வித்தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் 24 வயதிலிருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அனுபவம்: மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கட்டாயம் 18 மாதங்கள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத் தேர்வு, டிரைவிங் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழக அரசின் https://www.arasubus.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கட்டணமாக விண்ணப்பதாரர்கள் ரூ. 1180 செலுத்த வேண்டும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 590 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.