தமிழ்நாடு காவல் துறை 3,644 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

TNUSRB PC Constable Hall Ticket Download

TNUSRB PC Constable Hall Ticket Download: தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 3,644 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல் துறை 3,644 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

காவல் துறையில் 2,833 2 ஆம் வகுப்பு காவலர் பணியிடங்களும், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 631 தீயணைப்பு வீரர் பணியிடங்களும் உள்ளன. இவற்றுக்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இந்நிலையில் இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது

தகுதி: 2-ஆம் நிலை காவலா் காலிப் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை எழுத 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:18 வயது நிரம்பி இருப்பதுடன், 26 வயது பூா்த்தி ஆகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களின் வயது உச்சவரம்பானது வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கு தகுந்தவாறு மாறுபடும் என்று தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: தமிழகக் காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா், சிறை காவலா், தீயணைப்பாளா் காலிப் பணியிடங்கள் பொதுத் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த பிறகு, செப்.25-ஆம் தேதிக்குள்ளாக திருத்தங்களைச் செய்யலாம்.

நவ.9-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

NotificationView
Hall Ticket Download (ஹால் டிக்கெட் )Download

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *