TNUSRB SI Recruitment 2024: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் பற்றியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் சார்பு ஆய்வாளர் 2024 ஆம் ஆண்டு பணியிடங்களுக்கான அறிவிப்பு வருகிற ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ இணையதளமாக https://www.tnusrb.tn.gov.in/ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2023 மே மாதம் அறிவிக்கப்பட்ட சார்பு ஆய்வாளர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் 615 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆகஸ்ட் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் காலி பணியிடங்கள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு முன்னோட்டமாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சார்பு ஆய்வாளர் 2024 காலி பணியிடங்கள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
எத்தனை காலி பணியிடங்கள் என்னென்ன பதவிகள் என்பதை பற்றியான முழு தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வரும் பொழுது முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.