Tomato Price: கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை வரலாறு காணாத அளவு விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது தக்காளியின் விலை ரூ. 150 என்ற புதிய உச்சத்தை இந்த வாரத்தில் தொட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி 200 வரை கடந்த வாரங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டது. இதில் கடந்த வாரமும் விலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மட்டும் தக்காளி வறுத்து காரணமாக தக்காளி விலை ஏற்றம் சிறிதளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் தக்காளி வரத்து குறைவாக உள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை மீண்டும் ரூ.10 அதிகரித்து கிலோ 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஏற்கனவே வட மாநிலங்களில் மழை மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக தக்காளியின் வறுத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட தக்காளி வறுத்து வரும் மாநிலங்களில் கடந்த வாரம் கனமழையின் காரணமாக மேலும் தக்காளி வரவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தக்காளி வரத்து தட்டுப்பாடு காரணமாக மீண்டும் கடுமையான விளையாட்டு தக்காளி சந்தித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ. 140 இல் இருந்து ரூ. 150 ரூபாயாக அதாவது பத்து ரூபாய் ஒரே நாளில் உயர்ந்து விற்கப்படுகிறது.