Tomato Price Hits Dobule Century: கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு உள்ளது. சில நாட்களுக்கு முன்பாக தக்காளியின் விலை 100 ரூபாய் தொட்ட போது மக்கள் இதற்கு மேல் விலை ஏற்றம் இருக்காது, ஏனெனில் வரத்து வருவதால் தக்காளியில் விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் தக்காளி விலை குறைவு ஏற்படும் என்று நம்பினார். ஆனால் அதற்கு நேர் மாறாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளியின் சில்லறை விலை கிலோ ரூ.200 முதல் விற்கப்படுகிறது. இந்த அளவுக்கு கடுமையான விலையேற்றம் ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் பொதுமக்கள் தக்காளியை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இருந்தாலும் கடுமையான விலை ஏற்றம் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே மத்திய மாநில அரசுகள் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tomato Price Hits Dobule Century
தமிழகத்தில் மட்டும் இல்லாமல் பல மாநிலங்களும் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.200 வரை விற்பனை செய்துவரப்படுகிறது. தமிழகத்தில் ஏறு முகத்தில் இருந்த தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலை குறைந்து வந்தது தற்பொழுது மீண்டும் விலையேற்றம் காணப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் உணவகங்கள் நடத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
சென்னையில் முக்கிய காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தைக்கு தினசரி 60 முதல் 65 லாரிகள் வரை தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இருப்பினும் விளைச்சல் அதிகமாக இருந்த பொழுது 70 முதல் 75 லாரிகள் கொண்டுவரப்பட்டன. கடந்து சில வாரங்களாக 30 முதல் 35 லாரிகள் மட்டுமே தக்காளி கொண்டுவரப்பட்டுள்ளதால் தக்காளி காண கடும் தட்டுப்பாடு சென்னை மாநகரத்தில் ஏற்பட்டது.
இந்நிலையில் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நியாய விலை கடைகள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் கூட்டுறவு கடைகள் மூலமாக தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் தமிழக அரசால் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நடவடிக்கைகள் தக்காளியின் விலையை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்தினாலும் மீண்டும் தற்காலியின் விலை தலை தூக்க ஆரம்பித்துள்ளது.
எனவே இந்த நிலையில் பல உணவகங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் வீடுகளில் கடந்த சில நாட்களாகவே தக்காளி மூலம் சமைக்கப்படும் உணவுகள் தவிர்க்கப்பட்டு வந்தன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தக்காளி கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. சிறு கடைகள் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த கடுமையான தக்காளி விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணமாக வடநாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் கனத்த மழை பெரு வெள்ளங்கள் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இந்த மழை வெள்ளத்தால் தக்காளி வரத்து மற்றும் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஆந்திரா மற்றும் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளி இறக்குமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் தக்காளியின் விலை மிகவும் கடுமையாக ரூ.200 வரை ஏற்றம் கண்டுள்ளது. தக்காளியின் விலை நிலமை கட்டுக்குள் வர சில நாட்கள் மற்றும் சில வாரங்கள் பிடிக்கும் என வணிகர்களால் சொல்லப்படுகிறது.