TRB GT/BRTE Recruitment 2023: தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி கல்வி ஆசிரியர் BRTE ஆகிய ஆசிரியர் பணியிடங்களுக்காக மொத்தமாக 2,222 வேலைவாய்ப்பு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பதவிகளுக்கு பனிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்புடன் B.Ed அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்
- GRADUATETEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023
மொத்த காலியிடம்
- காலிப் பணியிடங்கள் துறை ரீதியாகவும் மற்றும் பாடங்கள் வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2,222 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு 07-01-2024 அன்று நடைபெற உள்ளது.
சம்பள விகிதம்
- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை துணை பணிகள் கீழ் வரும் இந்த வேலை வாய்ப்பிற்கு ரூ.36,400 – 115700 என்ற 16 வது நிலை ஊதியம் வழங்கப்படுகிறது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
- இந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப கட்டணம் ரூ.600 ( SC/SCA/ PWD – ரூ.300).
- இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் 01/11/2023 முதல் 30/11/2023 வரை விண்ணப்பிக்கலாம்
Notification – Click here
Apply here – Click here