தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஏப்.17- புதன்னன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் இதுவரை ரூ. 1,297 கோடிக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் வாக்குகளை செலுத்த இன்று கடைசிநாள்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏப்ரல் 18 மாலை 6 மணி வரை அஞ்சல் வாக்குகளை செலுத்தலாம். பயிற்சி மையங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று அஞ்சல் வாக்குகளை பதிவு செய்யலாம்.அஞ்சல் வாக்குகள் அனைத்தும் திருச்சியில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதுவரைக்கும் 39 தொகுதிகளில் மொத்த மாக 8,400 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி தொகுதியில் மட்டும் 3,369 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்களிக்க 12 ஆவணங்கள்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்த கங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, வருமான வரி நிரந்த ரக் கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலை மைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், ஒன்றிய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறு வனங்கள். வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப் படும் அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இய லாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.