50000 Job Vacancies in Tamilnadu Govt: அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 50,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அறிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு அரசு தேர்வாணையங்கள் மூலமாக தேர்வான 27,858 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதுவரை 60,567 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50,000 காலி பணியிடங்கள் அடுத்து இரண்டு ஆண்டுகளில் அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக முதல்வர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆண்டு 2024 ஜூன் மாதத்திற்குள் 10,000+ காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இன்று நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சமீபத்தில் தேர்வான 1598 பேருக்கு பணி நியமான ஆணைகளை வழங்கி முதல்வர் அவர்கள் நிகழ்ச்சிகள் பங்கேற்றார்.
இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 6244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 1933 பல்வேறு பொறியாளர் மற்றும் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு 15/03/2024 விண்ணப்பம் செய்வதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.