TNPSC Group 4 Vacancy Updated: டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கான குரூப் 4 காலிப்பணியிடங்கள் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பல்வேறு பதவிகளுக்கு 7,301 காலி பணியிடங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த காலிப்பணியிடம் 10,117 உயர்த்தப்பட்டதாக அறிவித்து. இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் தேர்வுகள் மத்தியில் இந்த காலிப் பணியிடத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக டிஎன்பிசி எடுத்த நடவடிக்கையின் கீழ் இன்று (30.06.2023) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மொத்தமாக 10,292 காலி பணியிடங்கள் புதிதாக உயர்த்தப்பட்டுள்ளன.
TNPSC Group 4 Vacancy Updated
இதில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்கள் 5289 லிருந்து 5321 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் பதவி 3297 இருந்து 3377 ஆக உயர்த்தப்பட்டுள்ளது சுருக்கெழுத்தர் கிரேட் 3, 1077 இருந்து1079 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், பண்டகக் காப்பாளர் பில் கலெக்டர், கள உதவியாளர் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.
டி என் பி எஸ் சி குரூப் 4 காலியிடங்கள் அதிகரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here