Pongal Festival 2024: மாணவிகள் வேஷ்டி அணிந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி! பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது!
பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகள் வரும் 13ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை முன்னரே உங்கள் திருவிழா கொண்டாட்டங்கள் விடுமுறைக்கு முன்னதாகவே உங்கள் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்கள் வேஷ்டி அணிந்து கொண்டு பொங்கல் திருவிழா கொண்டாடி மகிழ்ந்தது வைரலாகி வருகிறது.
திருப்பூரில் உள்ள ஏ.வி.பி தனியார் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் மாணவிகள் வித்தியாசமாக வேஷ்டி அணிந்து வந்து உற்சாகமாக ஆடி மகிழ்ந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பெண்கள் மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வந்து மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார் பாரம்பரியமாக மாணவிகள் சேலை அணிந்து கொண்டும் இந்த பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினார் இதில் வித்தியாசமாக சில பெண்கள் ஆண்கள் அணியும் வேஷ்டி அணிந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில் கல்லூரியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் வாலிபர்களை போல வேஷ்டி சட்டை கண்ணாடி அணிந்து கொண்டு வித்தியாசமான முறையில் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு பொங்கல் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி போன்றவை அரங்கேற்றப்பட்டன. இது கல்லூரியில் உள்ள மாணவிகள் மற்றும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.