Private Mega Job Fair: Job Fair in Chennai July 22, 2023 – கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ள செய்தி வெளியிடும் மூலமாக இந்த தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 300-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாநிலக் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10th, ITI, 12th, Diploma, Degree, B.E/B.Tech என அனைத்து துறை படிப்புகளையும் கொண்ட அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். கிட்டத்தட்ட 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கு முதல் கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு கட்டணமோ நுழைவு கட்டணமோ எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி தங்கள் திறமைக்கேற்ற வேலையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் சென்னையில் வரும் 22 ஆம் தேதியும் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அடுத்தடுத்து 100 இடங்களில் இது நடத்தப்படும் என்று தெரிகிறது.
சென்னை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் கீழே உள்ள Registration Link மூலமாக இலவசமாக பதிந்து இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்கவும்.
மேலும் வரும் 21 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela என்ற அரசின் அதிகாரப்பூர்வ தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து அந்த வேலை வாய்ப்புகளையும் நீங்கள் பங்கேற்றுக் கொள்ளலாம்.
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!! சென்னையில் வரும் ஜூலை 22 ஆம் தேதி நடைபெறுகிறது!
Chennai Job Fair July 22, 2023 Registration Link : Click here
Official News : Click here