www.arasubus.tn.gov.in site down : தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப இணையதளம் www.arasubus.tn.gov.in முடங்கியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநர் உடன் நடப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வேலை வாய்ப்புக்கு இன்று மதியம் முதல் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக https://www.arasubus.tn.gov.in/ ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அதன்படி 18/08/2023 மதியம் 1:00 PM மணி முதல் 18/09/2023 மதியம் 1:00 PM வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்த ஆன்லைன் விண்ணப்பம் ஆனது திடீரென இணையதளம் முடங்கியது. இணையதளம் முடக்கத்திற்கு முக்கிய காரணமாக ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முயற்சி செய்தால் இணையதளம் முடங்கியதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிப்பதற்கான https://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் முடங்கியதால் மிகவும் அவதிப்பட்டு உள்ளனர்.