RPF Recruitment 2024: ரயில்வே பாதுகாப்பு காவல் படை(RPF/RPSF) 2250 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. ஜனவரி 2024 அன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உதவி ஆய்வாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய பதவிகள் அடங்கும். 15 % காலிப் பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வர உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்
- உதவி ஆய்வாளர்
- காவலர்
கல்வித் தகுதி
- உதவி ஆய்வாளர்: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- காவலர்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடம்
ரயில்வே நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த காலிப்பணியிட அட்டவணையில் உதவி ஆய்வாளர் 250 காலியிடங்களும் காவலர் விரைவில் 2000 காலியிடங்களையும் நிரப்பள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு
- உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 20 அதிகபட்ச வயது 25. காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 25.
- அரசு விதிகளின்படி OBC, SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யும் முறை
- கணினி வழி தேர்வு ( ரயில்வே ஆள்சேர்ப்பு நிர்வாகத்தால் நடத்தப்படும்)
- உடல் தகுதி/ அளவீடு தேர்வு ( ரயில்வே பாதுகாப்பு காவல் படையால் நடத்தப்படும்)
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: Not Announced
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: Not Announced
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் விடப்பட்டுள்ள இந்த கீழ்கண்ட அறிவிப்பில் மேற்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது:
Notice: Click here