Oor kaval Padai Recruitment 2023 – ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2023: தமிழ்நாடு அரசு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊர்க்காவல் படைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஊர் காவல் படை வேலைவாய்ப்புக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலரும் விண்ணப்பிக்கலாம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிகள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரு நகர காவல்துறையின் ஊர்க்காவல் படையில் சேர இளைஞர்கள் விண் ணப்பிக்கலாம் என சென்னை பெரு நகரக் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். ஊர்க்காவல் படைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு 18-50 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
மேலும் என்சிசி என்எஸ்எஸ் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர்களுக்கும் முன்னுரிமை இதற்கு முன்பு தரப்பட்டது. ஊர்க்காவல் படைக்கு அவர்கள் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் அதற்கான ஊதியம் ஒரு நாளுக்கு ரூ. 560 ஆக வழங்கப்பட்டு வந்தது.
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படை வீரருக்கு, 45 நாள்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சிகள் அளிக்கப்ப டும். பின்னர் அவரவர் வசிக்கும் பகுதி யில் உள்ள காவல் நிலையங்களில் உத வுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர். சீருடை, தொப்பி, காலணி ஆகி யவை வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி, போக்குவ ரத்து பணிக்கு நாளொன்றுக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும் (பெண் களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும்). சிறப்பாக பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம், குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படை விதித்துள்ளனர்
விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது, இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள், சென்னை ஊர்க்காவல்படை தலைமை அலுவல கம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், அண்ணாசாலை, சைதாப் பேட்டை, சென்னை-15 என்ற முகவரி யில் இலவசமாக விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம். ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள் பெண்கள் ஆகஸ்டு 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஊர் காவல் படை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.