தமிழகப் போக்குவரத்து கழகம் சார்பில் தீபாவளிக்கான பண்டிகைக்கான சிறப்பு பேருந்து பற்றி அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தீபாவளி தினத்தை ஒட்டி நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுவதால், சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக மக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ரயில் மற்றும் விரைவு போக்குவரத்து கழகங்களில் முன்பதிவு செய்துள்ளவர்களை தவிர சிறப்பு பேருந்துகளையும் ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி தமிழக அரசு போக்குவரத்து சார்பில் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் பற்றியான அறிவிப்பு, முன்பதிவு மற்றும் அனைத்து பேருந்து அட்டவணை பற்றியான அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தீபாவளி பண்டிகை அன்று முன்பதிவு செய்ய விரும்புவோர் அக்டோபர் 28ஆம் தேதி போக்குவரத்து துறை அறிவிப்பை பொறுத்து முன்பதிவு மற்றும் போக்குவரத்து வசதிகள் பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொள்ளலாம்.