July 15 Special Day in Tamil nadu: ஜூலை 15 தமிழ்நாட்டில் சிறப்பு நாள் என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். ஏனென்றால் ஜூலை 15 தமிழ்நாட்டின் கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்கள் பிறந்த நாள். இந்த நாளை தமிழக அரசு தமிழ்நாட்டின் “கல்வி வளர்ச்சி நாளாக” கொண்டாடுகிறது.
முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15, இந்த கல்வி ஆண்டு (2023 முதல் 2024) முதல் அனைத்து பள்ளிகளும் இந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கல்வி வளர்ச்சி நாள் முன்னிட்டு பள்ளிகளில் பேச்சுப்போட்டி எழுத்துப்போட்டி உள்ளிட்ட பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக 03 ஏப்ரல் 1954 முதல் அக்டோபர் 02, 1963 வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும், பண்டித நேரு இறந்ததற்கு பிறகு பிரதம மந்திரியை தேர்ந்தெடுக்கும் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தார். காங்கிரஸின் தலைவராக 1964-67 வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.