கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்! ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம், விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Kalaingar Magalir Urimai Thogai : தமிழகத்தில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…

கலைஞர்  மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டம் தமிழ்நாட்டில் விரைவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது.

மக்களுடன் முதல்வர் என்ற அந்த சிறப்பு திட்ட முகாமில் இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திடத்துக்கு விண்ணப்பிக்கலாம். 

  அப்படி விண்ணப்பிக்கும்போது, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும் வாங்கி பாஸ்புக், மொபைல் எண் கட்டாயம் வேண்டும். 

ஆதார் அட்டை மட்டும் இருந்து குடும்ப அட்டை இல்லாதவர்களாக இருப்பின் கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. 

எனவே, இதுவரை குடும்ப அட்டை பெறாதவர்கள் முதலில் குடும்ப அட்டை பெற்று பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணபிக்கவும். 

அதேபோல், விண்ணப்பிக்கும் முன் நீங்கள் தமிழ்நாடு அரசால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து வதிமுறைகளுக்கும் உட்பட்டவரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   

இல்லையென்றால் கலைஞர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் பயனாளியாக தேர்வுசெய்யப்படமாட்டீர்கள். உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். பொருள் வாங்கும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு மிகாமல் நன்செய் நிலங்களும், 10 ஏக்கருக்கு மிகாமல் புன் செய் நிலங்களும் இருந்தால் கூட விண்ணப்பிக்கலாம். நோய்வாய்ப்பட்ட சிலருக்கு சிறப்பு விலக்குகள் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் ஊராட்சிமன்ற தலைவர், கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி, நகர்மன்ற தலைவர் ஆகியோரின் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தில் சேர முடியாது. 

Read also: TN 10th Result 2025 Live : தமிழ்நாடு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; நேரடியாக பார்க்க லிங்க் இதோ..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *