ரூ. 1,000/- உரிமை தொகை: ஆளும் திமுக தலைமையிலான தமிழக அரசு கடந்த 2021 தேர்தல் அறிக்கையின் போது குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 உரிமைத் தொகை ஒவ்வொரு மாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த இந்த திட்டத்திற்கான அறிவிப்பு ஈரோடு இடைத்தேர்தலில் போது முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பயனாளர்களை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன இறுதிக்கட்டமாக 26.06.2023 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை நடந்து முடிந்து இறுதிக்கட்டமாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
குடும்ப தலைவிக்கு ரூ. 1000 உரிமை தொகை
இதற்கிடையே சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட ரூ. 7000 கோடி உரிமை துறைக்கான பட்ஜெட் ஆக ஒதுக்கப்படுகிறதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதன் மூலம் மாதம் ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டாலும் ஒரு கோடி பெண்கள் மட்டுமே பயன்பெறுவர் என்று சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ரூ. 7000 கோடி ஒதுக்கினால் வெறும் 7 மாதங்கள் மட்டுமே பயனாளர்களுக்கு உரிமைத் தொகை வழங்க முடியும் என்ற கருத்தும் அங்கே ஏற்பட்டது.
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் யாரெல்லாம் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை பெற தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை பற்றியான முழு ஆலோசனை நடைபெற்றதாகும் அது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
“ரூ. 1,000/- உரிமை தொகை” பெற கீழ் காணும் முக்கிய காரணிகள் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என கருத்து நிலவுகிறது”
- அரசு வேலையில் இல்லாதோர்
- வருடம் 2.5 லட்சம் வருமானம் இல்லாதோர்
- ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்போர்
- பென்ஷன் வாங்காதோர்
- வருமான வரி செலுத்தாதோர்
ஆகவே மாதம் ரூ. 1,000/- உரிமை தொகை வழங்குவதை சமூக நலத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும் முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் இருந்து மாதம் ரூ. 1,000/- உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Useful of the links most of poor people for useful in link