Magalir Urimai Thogai Form: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 தகுதி வாய்ந்த இல்ல தரிசிகளுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் என்னென்ன தகுதிகள் கலைஞர் உரிமைத்தொகை பெறுவதற்கு என்பதற்கான 11 வகை தகுதிகளை தமிழக அரசு நிர்ணயித்தது. அதற்கான விண்ணப்ப படிவத்தையும் வெளியிட்டு அந்த 11 உறுதிமொழிகளை உறுதி செய்து கொண்டு கையொப்பமிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அந்த வகையில் விண்ணப்பம் மாதிரியை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டது.
Magalir Urimai Thogai
வருகின்ற அண்ணா பிறந்தநாள் ஆன செப்டம்பர் 15 முதல் உறுதியாக மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் மீண்டும் உறுதியளித்தார். அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டமிடப்பட்ட தேதியில் உறுதியாக வழங்கப்படும் என்பதற்கான நடைமுறைகள் தமிழக அரசு வேகமாக எடுத்து வருகிறது.
அந்த வகையில் மகளிர் உரிமை தொகை இதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்பம் வீடு வீடாக வருகிற ஜூலை 20ஆம் தேதி வழங்கப்படும் என்று தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் சுற்றறிக்கை அளித்துள்ளார். அந்த வகையில் ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை பெற ஜூலை 20 முதல் டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000/- விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்வது எப்படி?