MHC Recruitment 2024: மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து 2329 மிகப்பெரும் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 17 விதமான வெவ்வேறு காலிப் பணியிடங்கள் கொண்ட பதவிகள் அடங்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட வாரியாக இதற்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக தனித்தனியாக காலிப்பணியிடங்கள் மற்றும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பதவியின் பெயர்
- நகல் பரிசோதகர் (Examiner)
- நகல்வாசிப்பாளர்(Reader)
- முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff)
- இளநிலை கட்டளை நிறைவேற்றுனர். (Junior Bailiff/ Process Server)
- கட்டளை எழுத்தர் ( Process Writer)
- ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)
- ஓட்டுநர்(Driver)
- நகல் பிரிவு உதவியாளர் (Copyist Attender)
- அலுவலக உதவியாளர் (Office Assistant)
- தூய்மைப் பணியாளர் (Cleanliness worker/Scavenger)
- தோட்டப் பணியாளர் (Gardener)
- காவலர் / இரவு காவலர் (Watchman / Nightwatchman)
- இரவு காவலர் மற்றும் மசால்ஜி (Nightwatchman-cum-Masalchi)
- காவலர் மற்றும் மசால்ஜி (Watchman-cum-Masalchi)
- தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி (Sweeper-cum-Masalchi)
- வாட்டர்மென் / வாட்டர்வுமன் (Waterman / Waterwoman)
- மசால்ஜி (Masalchi)
கல்வித் தகுதி
இந்த பதவிகளுக்கான கல்வி தகுதியாக எழுத படிக்க தெரிய வேண்டும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி உடன் மிதிவண்டி ஓட்ட தெரிய வேண்டும் ஆகிய கல்வி தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு
இந்த பதவிகளுக்கு 01-07- 2024 அன்றைய தேதியின்படி குறைந்தபட்ச வயதாக 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
இதில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளைச் சார்ந்த ஆதரவற்ற பதிவுகள் ஆகியோருக்கு 37 வயதாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர் பரப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இஸ்லாமியர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு 34 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்
இந்த வேலை வாய்ப்புக்கான தேர்வு கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
- பொது எழுத்து தேர்வு
- செய்முறை தேர்வு ( ஒரு சில பதவிகளுக்கு மட்டும்)
- வாய்மொழி தேர்வு
முக்கியமான நாட்கள்
- இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 28.04.2-24
- இணையதளம் வாயிலாக பண்ணிப்பதற்கான கடைசி நாள்: 27.05.2024
- தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 29.05.2024
- தேர்வுக்கான தேதி:- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
மாவட்ட வாரியாக காலியிடங்கள் – Click here
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் – Click here