New District in Tamilnadu 2024: தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அவை Ariyalur district ,Chengalpattu district ,Chennai district,Coimbatore district ,Cuddalore district ,Dharmapuri district ,Dindigul district ,Erode district ,Kallakurichi district ,Kancheepuram district ,Karur district ,Krishnagiri district , Madurai district ,Mayiladuthurai district ,Nagapattinam district ,Kanniyakumari district , Namakkal district ,Perambalur district ,Pudukottai district , Ramanathapuram district , Ranipet district ,Salem district , Sivagangai district ,Tenkasi district ,Thanjavur district ,Theni district ,Thiruvallur district, Thiruvarur district , Thoothukudi district ,Trichirappalli district , Thirunelveli district ,Tirupathur district ,Tiruppur district , Tiruvannamalai district , The Nilgiris district ,Vellore district ,Viluppuram district , Virudhunagar district.
கடந்த 2019ஆம் ஆண்டில் 5 மாவட்டங்கள் புதிதாக உருவானது அதன்படி நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37) என 5 புதிய மாவட்டங்கள் உருவாயின
மேலும் மக்கள் தொகை பெருக்கம், வருவாய் மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாவட்டங்கள் பிரிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக கும்பகோணம் விருத்தாசலம் பழனி கோபிச்செட்டிபாளையம் ஆரணி பொள்ளாச்சி கோவில்பட்டி ஆகிய 7 மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து, ஆரணி என்ற தனி மாவட்டம்
- தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணம் என்ற தனி மாவட்டம்
- தூத்துக்குடி மாவட்டத்தைப் பிரித்து கோவில்பட்டி என்ற தனி மாவட்டம்
- திண்டுக்கல் மாவட்டத்தைப் பிரித்து பழனி என்ற தனி மாவட்டம்
- கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பொள்ளாச்சி என்ற தனி மாவட்டம்
- கடலூர் மாவட்டத்திலிருந்து விருதாச்சலம் என்ற தனி மாவட்டம்
- ஈரோடு மாவட்டத்திலிருந்து கோபிச்செட்டிப்பாளையம் என்ற தனி மாவட்டம்
உருவாக்க பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால்தான் உணமை நிலவரம் தெரிய வரும் மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.