தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க வேண்டும் என்றால் குடும்பத் தலைவர்கள் அல்லது தலைவர்களில் யாரேனும் ஒருவர் தங்களது கைரேகை பதிந்து அதன் மூலம் பொருட்களை பெற முடியும். அதற்கான செய்தி அவர்கள் பதிந்துள்ள ரேஷன் அட்டை மூலமாக அவர்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மேலும் அவர்கள் என்ன பொருள்கள் வாங்கினால் என்பது பற்றிய முழு விவரமும் அவர்களது தொலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்று.
ஆனால் தற்பொழுது கைரேகை மூலமாக பொருட்கள் வாங்கப்படும் நடவடிக்கையானது சில நேரங்களில் மிகவும் சிரமமாகவும் கைரேகை சரியான முறையில் ஸ்கேனிங் ஆகாத காரணத்தால் பொருட்கள் வாங்குவதில் காலதாமதம் மற்றும் தேவையில்லாத நேர வரையும் போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு விரைவில் கண் கருவிழி மூலமாக ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என்பது பற்றியான நடவடிக்கை விரைவில் எடுக்க இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிராமப் பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் பெரும்பாலும் வயதானவர்கள் மற்றும் பலருக்கு கைரேகை மூலமாக பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் கைரேகை முறை வைக்கும் பதிலாக கண் விழித்திரை மூலமாக பொருட்கள் வாங்கும் செயல்முறை விரைவில் நியாய விலை கடைகளில் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.